கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்- ஜாலி ரைட் ரமணி அமரிக்காவில் இருக்கும் தன் பொண் அன்ன்யாவுக்கு கல்யாணம் பண்ண முடிவு செய்து மேட்ரிமோனி டாட்காம்களை அணுக அவர் நண்பர் “ஓய் கல்யாண மாப்பிள்ள கடச்சுடுவன்.நீர் மண்டபம் சாப்பாடு ஃபோட்டொ இதெல்லாம் முதல்ல தேடி முடிச்சுக்கோ.” சரி என கல்யாணமண்டபங்களைத் தேடி அலைந்தார்.சிட்டியில் உள்ள அந்த மண்டப ஆபீஸ்’என்ன அடுத்த வருஷம் தையில் டேட்டா சாரி சார் 2019ல் தான் தையில் ஒரு நாள் மண்டபம் காலி யிருக்கு.” ஓ ஹோ இவர்களே வாத்யார்ஸ்வாமி போல முஹூர்த்த தின்ங்கள குறிச்சு அந்த நாட்கள புக் பண்ணிடறாபோல அப்டின்னு மெதுவா புரிஞ்சுண்டார். சரி என அடுத்த மண்டபத்துக்கு ஆட்டோவில் பறந்தார்.”சார் நீங்க ரொம்ப லக்கி நீங்க சொல்ற தை 2018ல் 5 நாட்கள் ஃப்ரீதான் சூஸ்பண்ணுங்க எது சௌகர்யம்ன்னு” ”எவ்வுளவு வாடகை?” “சார் 12 போகுது நீங்க முந்திண்ட்தால 10க்கு முடிக்கலாம்” ரமணிக்கு புரியவில்லை என்பதை புரிந்துகொண்ட மண்டப ஆஃப்ஃபிஸ் மேனேஜர் “அதான் சார் 10 லக்ஷம்.” ”ரமணி அட இவ்வுளவா நான் கல்யாணமே 10லக்ஷத்தில் முடிக்கலாம்னு இருந்தேன்.” உடனே அவர் ஒரு தமிழ் பேப்பர் விளம்பரத்தைக்காட்டினார்.”தா...