கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்- ஜாலி ரைட்
ரமணி அமரிக்காவில் இருக்கும் தன் பொண் அன்ன்யாவுக்கு கல்யாணம் பண்ண முடிவு செய்து மேட்ரிமோனி டாட்காம்களை அணுக அவர் நண்பர் “ஓய் கல்யாண மாப்பிள்ள கடச்சுடுவன்.நீர் மண்டபம் சாப்பாடு ஃபோட்டொ இதெல்லாம் முதல்ல தேடி முடிச்சுக்கோ.”
சரி என கல்யாணமண்டபங்களைத் தேடி அலைந்தார்.சிட்டியில் உள்ள அந்த மண்டப ஆபீஸ்’என்ன அடுத்த வருஷம் தையில் டேட்டா சாரி சார் 2019ல் தான் தையில் ஒரு நாள் மண்டபம் காலி யிருக்கு.”
ஓ ஹோ இவர்களே வாத்யார்ஸ்வாமி போல முஹூர்த்த தின்ங்கள குறிச்சு அந்த நாட்கள புக் பண்ணிடறாபோல அப்டின்னு மெதுவா புரிஞ்சுண்டார்.
சரி என அடுத்த மண்டபத்துக்கு ஆட்டோவில் பறந்தார்.”சார் நீங்க ரொம்ப லக்கி நீங்க சொல்ற தை 2018ல் 5 நாட்கள் ஃப்ரீதான் சூஸ்பண்ணுங்க எது சௌகர்யம்ன்னு”
”எவ்வுளவு வாடகை?”
“சார் 12 போகுது நீங்க முந்திண்ட்தால 10க்கு முடிக்கலாம்”
ரமணிக்கு புரியவில்லை என்பதை புரிந்துகொண்ட மண்டப ஆஃப்ஃபிஸ் மேனேஜர் “அதான் சார் 10 லக்ஷம்.”
”ரமணி அட இவ்வுளவா நான் கல்யாணமே 10லக்ஷத்தில் முடிக்கலாம்னு இருந்தேன்.”
உடனே அவர் ஒரு தமிழ் பேப்பர் விளம்பரத்தைக்காட்டினார்.”தாம்பரத்திலிருந்து 30 நிமிஷ பயணம் நல்ல ருசியான குடிநீர் கார் பார்க்கிங்க் வசதி :” இதென்ன ரியல் எஸ்டேட் ஃபளேட் விளம்பரம் எதுக்கு சார்.
இல்ல சார் மேல படிங்க :” 2நாள் மண்டப வாடகை 3 லக்ஷம்.”விலாசம்.நம்பர் 420-உடான்ஸ் வீதி ... மறைமலை நகர் .”
இந்த மாதிரி நீங்க அவுட்டர்ல போனால் சீப்பா கிடைக்கும்.கிழக்கு தாம்பரத்திலேயே 5 லக்ஷம் வாடகை இப்ப எல்லாரும் அங்க தான் பண்றா.அங்க ஒரு பகுதில உஸ்மான் ரோட் நகை கடைங்க மாதிரி ஒரே கல்யாண மண்டபங்கள் அந்த இட்த்துக்கு கல்யாண் நகர்னு பேரு அங்க ட்ரை பண்ணுங்க”என்று தன் புக்கிங்க் புத்தகத்தை மூடினார்.
கடு கடுன்னு வெளியில் வந்த ரமணி சரி அடுத்தநாள் ஃபோட்டோக்ஃராஃஃபரைைப் பாக்கலாம்னு போகிறார்.
ரீட்டா ஸ்டூடியோ பெரிசு.உள்ளே போனால் சினிமா செட்டிங்க் மாதிரி நிறைய இருக்கு பி எம் டபுள்யூ கார் மற்றும் ஃபாரின் மோட்டார் பைக் எல்லாம் நிறுத்தி இருக்கு.ஒருவேளை பெரிய பணக்காரா வந்திருப்பார்களோ ஆனாஉள் பக்கம் கேப் விட்டு விட்டு ஏன் நிக்குது ரமணி கேட்டே விட்டார்.
சார் அதுவா நீங்க அந்தகால ஸ்டூடியோவில பின்னால் பெயின்ட் பண்ண ஸ்கூட்டர் இயற்கை காக்ஷிகள் முன்னால் அல்லது மர சேர் டேபுள் முன்னால் அமர்ந்து எடுத்துக்கறாமாதிரி இப்ப பி எம் டபுள்யூ கார் ஸுஸூக்கிஹய்யாபுசா 1300 பைக்ல உட்காந்து எடுத்துக்கறாங்க இது கேபினட் ஸைஸ் 5000 ரூபார்.நீங்க என்ன எடுக்கணும்.
அடப்பாவின்னு மனசுல நினச்சுண்டு “இல்ல நான் கல்யாண வீடியோ ஃபோட்டோ எடுக்கணும் எவ்வுளவு ஆகும்”
ப்ராமி்ன் கல்யாணம்னா முந்தின்நாள் உதகஸாந்தி வ்ரதம் கல்யாணம் அப்புரம் ரிசப்ஷன்னு எல்லாம் 4 லக்ஷம் ஆகும்” எல்லாம் தெரிஞஜிருக்கு வாத்யாஸ்வாமி கூட மரந்துடுவார் போல
அய்யோ “ கல்யாண காரியம் பேச வந்து அய்யோ சொலிட்டோமேன்னு வயக்க்டிச்சுண்டு என்ன சார் ஒரு 4500 அல்லது 5000 ஆகும்னு நினச்சேன்.”
அடி நீங்களா மோபைல்ல உதகசாந்தி ஊஞ்சல் நலுங்கு கன்யாதானம் மாங்கல்யதாரணம்னு செல்ஃபீல எடுத்துக்க செல்ஃபி எடுக்கும் ராட் தரோம் எடுத்து மோபைல குடுத்தீங்கன்னா டெவெல்ப்ப்பண்ணி ஒரு ஆல்பம் தருவோம்.இது வேணா 5000த்துல முடிக்கலாம்.”
ஏங்க ஒரேடியா 4 லக்ஷம் அக்ரம்மாய்ருக்கே?”
“அய்யரே இது அந்த காலம் மாதிரி கறுப்புத்துணிக்குள்ள பூந்து ஃபோட்டோ புடிப்பதில்ல இதுக்கு ஆளில்லா குட்டி விமானம் கேமராவோட மண்டபத்துக்குள ரவுண் அடிக்கும் .3 க்ரேன்ல கமராக்களை கட்டி தொங்கவுட்டு ஷாட் எடுப்போம்.லேடர்னு ஏணில கேமராவோட ஏறி உயிரக்கைல பிடுச்சுக்கினு எங்க ஆளுங்க வீடியோ புடிப்பானுங்க .இத்த தவிர் 4 அல்லது 5 ஸ்ட்டாடிக்(நிற்கும்) கேமரா வீடியொ இன்னா நினச்ச்.இப்ப ஸினிமா எடுக்கற ப்ரொட்யூசர்ங்க கேமராமான் டைரக்டர் எல்லாம் அத்த் விட்டுட்டு இந்த் பிஸினஸ பார்ட்னர்ஷிப்ல பண்ராங்க சினிமா எட்த்தா அது ஸென்ஸார் ஆகணும் விளமர செலவு டிஸ்ட் ரி்ப்யூடர் அடம் புடிக்கறது நடிகன் நடிகை டெச்னீஷியன் சம்பளம் போக என்ன நிக்கும் சில் சமயம் படம் ஊத்திக்கினா சேட் கடனக்கேட்டு நச்சரிச்சுடுவான்.இந்த பொழப்பு வருஷம் 90 நாள் முகூர்த்தம் கிடைக்க்ய்ம் மூணரைக்கோடி வருமானம் இதில 15 பர்ஸன்ட் நிக்கும் மூணுபருக்கும் 1.5 லக்ஷம் தான் பா.
தலை சுத்த அங்கிருந்து ஸ்ரீ கேட்டரிங்க ஆபீஸ் விளம்பரம் வைஷ்ணவ மாத இதழில் பார்த்த்து.உள்ளே செல்கிறார் ரமணி. பெரிய ரிஸப்ஷன் ஹோட்டல் போல் பெரிய சோஃபா டீப்பாய் அடையார் ஆன்ந்த பவன் மெனு புஸ்தகத்திவிட மிக பெரிதா என்ஸய்க்ளோப்பீடியா ப்ரிட்டனிக்கா வைவிட சின்னதா ஒரு புஸ்த்கம். அட்டை ப்ரமாதம் லெதர் ஃபினிஷ் வழவழ பல்லை இளித்துக்கொண்டுவந்த நளச்சக்ரவர்த்தி ஸ்ரீதரன் மாமாவிடம் பொண்ணு கல்யானத்துக்கு புக்கிங்க செய்ய வந்த விஷயத்த சொல்ல அவர்” நீங்க இதில் உள்ள அயிட்டங்கள் ஸூப்கள் ஸ்ஸ்டார்டர்கள் ஸ்னேக்ஸ் வடநாட்டு ஸ்னேக்ஸ் மடிஸஞ்சி சாப்பாட்டு ஐட்டங்கள் பிரியாணி ஃப்ரைஎட் ரைஸ் குஸ்கா எல்லாம் வெஜ்தான் மாமா அத தவிர ரிஸப்ஷனுக்கு சப்பாத்தி பானி பூரி பேல் பூரி கோஃப்தா பன்னீர் அயிட்டங்கள் பரோட்டா அயிட்டங்கள்ன்னு இருக்கு.நீங்க டிக் பண்ணும் நானும் என் புஸ்தகத்ல் டிக் பண்ணுவேன் புஸ்தகத்தமாத்திப்போம்.என்ன ஒரு இலைக்கு 500 ருப்பாஇ ரிஸப்ஷன் கரேண்டா பஃப்ஃபே அப்படின்ன அதுக்கு தனியா 5 லக்ஷம்(அன் லிமிட்ட்ட் சார்)பாருஙகோ”சொல்லிக்கோண்டே அவருக்கு பெரிய கண்ணாடி லோட்டாவில் தர்பூஸ் ஜூஸ் குடுத்தார்.நன்னா இல்லை ஜூஸ் அல்ல் இந்த சாப்பாடு அப்ஜ்க்டிவ் டைப் ஆன்சர் பேப்பர்.வெளியில் வந்து ஆத்துக்கு ஆட்டோவில் பறந்தார்.
ரெண்டுநாள் ஆச்சு ஃபாரின் கால் அன்ன்யா அடுத்தநாள் வருவதாக.ஏர்போர்ட்டுக்கு ஆம்டயாளுடன் சென்றார்.
அன்ன்யா கூட ஒரு நேபாளி மூஞ்சிபையனுடன் இளித்துக்கொண்டே இறங்கி வ்ந்தாள்.
யாரம்மா
அப்பா உனக்கு செலவே இல்லாம் நான் கல்யாணம் பண்ணீண்டுட்ட்டேன் இவனை பேர் சிங்க் ஜா ஜங்க்
எந்த ஊர்
சைனாப்பா
இன்ன சிங்க் ஜா அடிக்கறானா?
இவர்கள்பேசுவது ஒண்ணும் புரியாமல் சிங்க ஜா ஜங்க் சிரித்துக்கொண்டிருந்தான்.
இவன் ஒர் சாஃப்ட் வேர்
இவன் பேரன்ட்ஸ்?
சைனால ஒரு பெரிய விவசாயி.
ஓஹோ என்ன விவசாயம்
கறப்பாம்பூச்சி பாம்பு பாச்ச தவளைன்னு ஒரு பெரிய பண்ண வச்சுருக்கார்
அப்ப ஸூ தான நட்த்தறார்.
இல்லப்ப இதையல்லாம் பெரிய லெவெல் ல வளத்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்கு சப்ளை அவா இத சாப்புடுவா.நம்ம ஊர்ல உணவுப்பொருளை உற்பத்தி பண்ணா விவசாயிதான இவரும் அத்த்தான பண்றார்.
கல்யாண மண்டபம் ஃபோட்டோக்ராஃபர் கேட்டரிங்க ஆகியவற்றால் ஏற்க்கனவே கலங்கி இருந்த ரமனிக்கு பாம்பு ஸூப்பும் கறப்பு கரமதும் நினச்சு வயிற்றை இன்னும் கலக்கியது



Comments
Post a Comment