எதார்த்தமான உண்மைகள்

எதார்த்தமான உண்மைகள்

கும்பிடும் வரை கடவுள்; திருட்டுப் போனால் சிலை !

எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!!
தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை என்
நாடு சுத்தம் ஆகாது!!!

ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம்!!

வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. !!

அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல, தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !!

இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!....நிதர்சனம்

இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!😐

இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!!

250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும் இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!!

மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!!!

தூக்கம் வராமல் முதலாளி... தூங்கி வழியும் வாட்ச்மேன.........முரண்.

Comments

  1. பிரமாதம் .ஒவ்வொவொரு குறிப்பும் மற்றதுக்கு சோடை போகவில்லை . யோஜிக்க வேண்டிய விஷயங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts